Loading...

தென்னை மீட்டெடுக்கும் வழிமுறை. சென்னையை அச்சுறுத்திய கஜா புயல் திசை மாறி, டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடிச் சென்றுவிட்டது. ஈரமற்ற அதன் தடயம் சாய்ந்துகிடக்கும் தென்னைகளிலும் வாழைகளிலும் தெரிகிறது. தங்களின் பல்லாண்டு கால உழைப்பையும் சேமிப்பையும் பறிகொடுத்த விவசாயிகள் நெஞ்சுக்கூடே காலியானது போல உணர்கின்றனர். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன. பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகள் இதில் பிரதானம். இயற்கைச் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால்…

Loading...

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில், ஏதாவது ஐந்து காய்கறி விதைகள் 40 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும், அதிகபட்சமாக, ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம்.…

Loading...

Hi Desi Cow Farmers, please enter your farm details, so that we can save our country breeds.   Loading… Share

Loading...

Dear Goat and Sheep Farmers, please enter your farm details so that buyers will approach you directly and you can increase your profits.   Loading…   Share

Loading...

  விவசாயத்துக்கு அடிப்படையான மண்ணின் தன்மைக்கேற்பவே என்ன விவசாயம் செய்யலாம் என்பதை முடிவு செய்ய இயலும். பொதுவாக ஒரு ஊரில் உள்ள மண்வளமானது அனைத்து வயல்களிலும் அதே தரமானதாகவோ, தன்மை உடையதாகவோ இருக்க முடியாது. ஒவ்வோர் வயலிலும் மண்ணின் தன்மையில் மாற்றம் இருக்கும். அதனைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிர் செய்வதே சிறந்ததாகும். மண்ணின் வளத்தை எவ்வாறு கண்டறிவது என்பதற்கு, ஒவ்வோர் மாவட்டத்திலும் வேளாண்மை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மண்பரிசோதனை நிலங்கள் உதவி செய்கின்றன. மண்…

Loading...

பசுந்தீவனம் கால்நடை வளர்ப்பு தீவனம் அளித்தல் சேமிப்பு முறைகள் பூச்சி மருந்து தெளித்தல் கேள்வி பதில் கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். பசுந்தீவனம் மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை…

Loading...

  பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.      அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக…

Loading...

Protecting crops from birds using technology விவசாயத்தில் பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் சேதத்தைவிடப் பறவைகளால் ஏற்படும் சேதம் மிக அதிகம். குறிப்பாக, மானாவாரி விவசாயத்தில் பறவைகளால் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில் எளிய தொழில்நுட்பம் மூலமாகப் பறவைகளை விரட்டி வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மானாவாரி விவசாயி காமராஜா. தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலச்செக்காரக்குடி கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார் காமராஜா. ஓர் உச்சி வெயில் நேரத்தில்…

Loading...

இயற்கை உரம் தயாரிப்பு முறை நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வே